ஜூலை மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 4.8 சதவீத வளர்ச்சி
2024-09-13 17:36:10

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் கடந்த ஜூலை மாதத்தில், 4.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம்  சுரங்கத்துறை 3,7 சதவீதமும், உற்பத்தித்துறை 4,6 சதவீதமும், மின்சார உற்பத்தித் துறை 7,9 சதவீதமும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் மதிப்பீடுகள் கடந்த 2023ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 142,7 சதவீதத்தில் இருந்து தற்போது 149.6 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு "ஜூலை மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகளில்  சுரங்கத்துறை 116.0, ஆகவும், உற்பத்தித் துறை  148.6  ஆகவும், மின் உற்பத்தித் துறை 220.2 ஆகவும் உள்ளன. கடந்த ஜூலை 2024 ஆம் ஆண்டு  உற்பத்தித் துறையில், அடிப்படை உலோக உற்பத்தி மற்றும் சுட்ட நிலக்கரி 6.4 சதவீதமும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் 6.9 சதவீதமும் மற்றும் மின் உபகரணங்கள் 28.3 சதவீதமும் ஆகும்.