சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை
2024-09-14 19:18:17

அமெரிக்க ஃபெட்ரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு சந்தையில் அதிகரித்ததுடன், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை செப்டம்பர் 13ஆம் நாள் புதிய உச்சத்தை தொட்டது. புவிசார் அரசியல் நெருக்கடி, அமெரிக்க கடன் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரக்கூடும் என்று சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்க ஃபெட்ரல் ரிசர்வ் வங்கி வரும் 17,18 ஆகிய இரு நாட்களில் நாணய கொள்கை கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று அமெரிக்க ஃபெட்ரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் கடந்த ஆகஸ்ட் திங்களில் கூறியிருந்தார்.