சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய ஆற்றல்
2024-09-14 09:49:32

சீனச் சேவை துறையின் மேலும் திறப்பு, உலகப் பொருளாதாரத்தின் முக்கிய முன்னேற்றச் சக்தியாகும் என்று ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ. க்யூ ஏர்விஷுவல் தொழில் நிறுவனத்தின் உலகத் தலைமைச் செயல் அதிகாரி ஃபிராங்க் கிறிஸ்டியன் ஹாம் கூறினார்.

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2023ஆம் ஆண்டு சீனச் சேவை துறையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 6 இலட்சத்து 57 ஆயிரத்து 543 கோடி யுவானாகும். இது வரலாற்றில் மிக அதிகமாகும். உலக அளவில் முன்னணியில் வகிக்கின்றது. சீனச் சேவை வர்த்தகத்தின் போட்டி ஆற்றல் தொடர்ந்து உயர்வதையும் சீனப் பொருளாதாரத்தின் புத்தாக்க உயிராற்றல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பதையும் இது காட்டுகின்றது. சீனச் சேவைத் துறை சந்தையின் மாபெரும் வளர்ச்சி, நாடு கடந்த தொழில் நிறுவனங்களுக்கு மாபெரும் வாய்ப்புகளைக் கொண்டுவந்துள்ளது.

இக்கண்காட்சியின் மூலம், உயர் மட்ட திறப்புடன் சேவை வர்த்தகத்தின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான சீனாவின் உறுதி, சீன பாணி நவீனமயமாக்கத்தின் உயிர்ச்சக்தி மற்றும் பெரும் வாய்ப்புகள் ஆகியவை காணப்பட்டுள்ளன.