தைவான் பிரச்சினை கப்பல் பயண சுதந்திர பிரச்சினை அல்ல: சீனா
2024-09-14 14:49:31

 

ஜெர்மனி போர் கப்பல் தைவான் நீரிணையைக் கடந்து சென்றது எந்த தரப்புக்கும் எதிரானது இல்லை என்றும், கப்பல் பயண சுதந்திரம் என்ற சர்வதேச கோட்பாட்டுக்கு இது ஆதரவளித்துள்ளது என்றும் ஜெர்மன் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் 13ஆம் நாள் தெரிவித்தார்.

13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநிங் அம்மையார் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாடு சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடாகவும், சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகவும் விளங்கியுள்ளது. தைவான் பிரச்சினை கப்பல் பயண சுதந்திரம் என்ற பிரச்சினை இல்லை. இது, சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சினையாகும். சீனச் சட்டத்திலும் ஐ.நாவின் கடல் சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்திலும் தொடர்புடைய கடற்பரப்பில் பன்னாடுகளின் கப்பல் பயண உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.  ஆனால் கப்பல் பயண சுதந்திரம் என்ற சாக்குபோக்கில், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை ஆத்திரமூட்டி சீர்குலைப்பதற்கு உறுதியாக எதிர்ப்போம் என்று மௌநிங் வலியுறுத்தினார்.