© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கடந்த ஏப்ரல் 17ஆம் நாள் முதல், பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையைச் சேர்ந்த 9701 இலக்கமுடைய கப்பல், சீனாவின் சியான்பின்ஜியோ பகுதியில் சுமார் 5 மாதங்களாக சட்டவிரோதமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. பிலிப்பைன்ஸ் தரப்பின் இச்செயல், சீனாவின் உரிமைப் பிரதேசங்கள் மற்றும் இறையாண்மையையும் தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையைக் கடுமையாக மீறியுள்ளதோடு, பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையைச் சீர்குலைத்துள்ளது. இக்காலத்தில், சீனா சட்டப்படி 9701 இலக்கமுடைய கப்பல் மீது கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டது என்று சீன கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் லியு டேஜுன் தெரிவித்தார்.
செப்டம்பர் 14ஆம் நாள் பிற்பகல் 2 மணியளவில், பிலிப்பைன்ஸின் 9701 இலக்கமுடைய கப்பல் சியான்பின்ஜியோ பகுதியில் இருந்து வெளியேறியது என்றும், பிலிப்பைன்ஸ் சீனாவுடன் இணைந்து தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையின் முக்கியத்துவத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.