© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
செப்டம்பர் 11 முதல் 13ஆம் நாள் வரை மூன்று நாட்களில் மட்டும், தென் சீன கடல் விவகாரம் குறித்து சீனா-பிலிப்பைன்ஸ் இடையேயான இரு தரப்பு கலந்தாய்வு முறைமையின் குழுத் தலைவர்கள் சந்திப்பு, 11ஆவது சியாங்ஷான் மன்றக்கூட்டம், தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சீனா மற்றும் ஆசியான் நாடுகளிடையேயான 22ஆவது உயர் அதிகாரிகள் கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்று, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து கூட்டங்களிலும் தென் சீனக் கடல் விவகாரம் குறித்து சேர்க்கப்பட்டதோடு, ஒரு பொதுவான தகவலும் வெளியிடப்பட்டது. அதாவது, பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்த்து, தென் சீன கடலின் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பது, அந்தந்த பிராந்தியத்தின் பொதுவான எதிர்பார்ப்பாகவும், பிராந்தியத்தின் நலன்களுக்கு அதிகபட்சமாக ஏற்றதாகவும் உள்ளது.
சீனா-பிலிப்பைன்ஸ் சந்திப்பில், தென் சீனக் கடல் விவகாரம், குறிப்பாக சியான்பின் ஜியோ விவகாரம் குறித்து இரு தரப்புகளும் நேர்மையான ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. சியான்பின்ஜியோ விவகாரம் பற்றிய நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்திய சீனா, பிலிப்பைன்ஸ் தரப்பு உடனடியாகவே கப்பலை வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. தனது இறையாண்மை, தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய பிரகடனத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை பேணிக்காப்பதாகவும் சீனா தெரிவித்தது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற சியாங்ஷான் மன்றக் கூட்டத்தில் தென் சீனக் கடல் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை சீனா மீண்டும் வலியுறுத்தியது. அதில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக அந்த பிராந்தியத்திற்கு வருவதாக அமெரிக்கா கூறியது. ஆனால், தற்போதைய ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழல் உள்ளதா? அபாயமான இடங்கள் அனைத்தும் சீனாவின் அண்டை பகுதிகளில் அமைந்துள்ளது ஏன்? ஆகிய கேள்விகளை சீன பிரதிநிதி ஒருவர் அமெரிக்க தரப்பிடம் எழுப்பினார்.
இணக்கமான உறவை முக்கியமாக வைப்பது என்பது சீனாவின் பழமையான ஞானங்களில் ஒன்றாகும். சியாங்ஷான் மன்றக் கூட்டத்தில், அந்த பழமொழி கொண்ட எழுத்துக்கலைப் படைப்பை சீன பிரதிநிதி அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக அளித்தது. அதில் அமைதி என்ற அறிகுறியும் வெளிப்படுத்தப்பட்டது. அதேசமயத்தில், சீனா தனது மனப்பான்மையைக் காட்டுகிறது. அதாவது, பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாட்டைக் களைய வேண்டும் என்று கருதும் அதேவேளையில், தென் சீன கடலின் இறையாண்மை சம்பந்தப்பட்ட முக்கிய நலன்களில் சீனா எந்த சமரசமும் செய்யாது. இது குறித்து, பிலிப்பைன்ஸும் பின்புறத்தில் பிரச்சினையைத் தூண்டுபவர்களும் தவறான தீர்ப்பு வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.