கொசோவோவின் பிரச்சினையில் செர்பியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கிறது சீனா
2024-09-17 19:33:12

கொசோவோவின் பிரச்சினையில், சீனா வழக்கம் போல செர்பியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து வருகிறது. கொசோவோவில், செர்பிய இனத்தவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப்படியான நலன்களுக்கு காப்புறுதி அளிக்கப்பட வேண்டும் என்று சீனா கருதுகிறது. கொசோவோவின் நிலைமை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 16ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.

ஒருதரப்பு  நடவடிக்கை பிரச்சினையைத் தீர்க்க உதவாமல், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பாதிக்கும். இதன் தொடர்புடைய தரப்புகள், நடைமுறைக்கு ஏற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொண்டு, நிரந்தரமான  தீர்வு காண முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் இந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.