தைவானுக்கு ஆயுத விற்பனையால் அமெரிக்காவின் 9 தொழில்நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் சீனா
2024-09-18 19:35:12

சுமார் 22கோடியே 80இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் கூறுகையில், அமெரிக்கா சீனாவின் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது, ஒரே சீனா கோட்பாட்டையும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும் கடுமையாக மீறியுள்ளது. சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை மீறியுள்ளது. சீன மற்றும் அமெரிக்க உறவுக்கும் தைவான் நீரிணையின் நிதானத்துக்கும் தீங்கு விளைவித்தது என்று தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக சீனா அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், அதற்கு பதில் நடவடிக்கையாக, அமெரிக்காவின் 9 இராணுவ தொழில்துறை நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்தது.