சீனாவின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிச் சாதனை
2024-09-18 11:25:45

சீனா நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவயொட்டி, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிச் சாதனைக்கான தொடர் அறிக்கைகளை சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் சமீபத்தில் வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டு முதல் இது வரை, ஷாங்காய் மாநகரம், ஜியாங்சு, ட்சேஜியாங் மற்றும் அன்ஹூய் மாநிலங்கள், யாங்சி ஆற்றின் கழிமுகப் பிரதேசத்தின் ஒருமைபாட்டிற்கான வளர்ச்சியை முன்னேற்றி, புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது. இப்பிரதேசங்களில் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் கூட்டாக கட்டியமைக்கப்பட்டு சாதனைகளைப் பெற்றுள்ளன. பொது சேவையின் உத்தரவாதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பிரதேசங்கள் சீனாவின் வளர்ச்சிக்குத் தலைமை தாங்குகிறது.

2023ஆம் ஆண்டில், யாங்சி ஆற்றின் கழிமுகப் பிரதேசத்தில் மொத்த உற்பத்தி மதிப்பு 30 இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, 30 இலட்சத்து 50 ஆயிரத்து 450 கோடியை எட்டி, மொத்த தேசியளவில் 24.4 விழுக்காட்டை வகிக்கிறது. 2022ஆம் ஆண்டில், இப்பிரதேசத்தின் ஆராய்ச்சி செலவு 93 ஆயிரத்து 860 கோடி யுவானாகும். இது, 2018ஆம் ஆண்டை விட 1.6 மடங்கு அதிகரித்து, மொத்த தேசியளவில் அளவில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலாகும்.