© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
லெபனான் தற்காலிக அரசு அமைச்சர்கள் கூட்டத்தை செப்டம்பர் 17ஆம் நாள் மாலை நடத்திய போது, அந்நாட்டின் தலைநகரான பெய்ரூட்டிலும், தென்கிழக்கு மற்றும் வடக்கிழக்கின் பல இடங்களிலும் கையடக்கப் பேஜர் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் 9பேர் உயிரிழந்தனர். சுமார் 2800பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 200பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் கூறினார்.
இந்தப் பேஜர் வெடிப்புச் சம்பவத்துக்கு இஸ்ரேல் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்கான பழி வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் லெபனான் ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இச்சம்பவம் ஏற்பட்ட பின், ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி லெபனான் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பு ஹபீப்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார். லெபனான் பொது மக்கள் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத செயலுக்கு அராக்சி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அமெரிக்கா திரட்டி வருவதாகவும் அதில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.