சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்:சீனா வேண்டுகோள்
2024-09-18 09:55:45

சர்வதேசச் சமூகத்தின் வலுவான குரலைக் கேட்டு, பாலஸ்தீன உரிமைப் பிரதேசங்களின் மீதான சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்று ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சோங் செப்டம்பர் 17ஆம் நாள் பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த ஐ.நா. பொது பேரவையின் அவசரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு தேர்வு அல்ல, ஆனால் இது இஸ்ரேலின் சட்டபூர்வமான கடமையாகும்.

பாலஸ்தீன உரிமைப் பிரதேசங்களை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பது சர்வதேச சட்டத்தை மீறியது என்று சர்வதேச நீதிமன்றம் ஜூலை 19ஆம் நாள் வெளியிட்ட ஆலோசனைக் கருத்தில் தெளிவாக உறுதிப்படுத்தியது. இரு நாடுகள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே ஒரு வழி. இது சர்வதேசச் சமூகத்தின் பரந்த ஒத்த கருத்தாகும். சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தை செயல்படுத்துவது பற்றிய ஐ.நா. பொது பேரவையின் வரைவுத் தீர்மானத்தைப் பாலஸ்தீனம் முன்வைத்துள்ளது. இதில் சீனா ஆதரவாக வாக்களிக்கும் என்றார்.