குறைக்கப்பட்ட அமெரிக்க வட்டி விகிதம்
2024-09-19 10:00:35

அமெரிக்க வட்டி விகிதம், 4.75 முதல் 5 விழுக்காடு வரையான வரம்பில் குறைக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி செப்டம்பர் 18ஆம் நாள் அறிவித்தது. கடந்த 4 ஆண்டுகளில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்கத் தொழிலாளர் துறை 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்டு மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.5 விழுக்காடு அதிகமாகும். இந்த அதிகரிப்பு அளவு, ஜூலை மாதத்தில் இருந்ததை விட 0.4 சதவீதப் புள்ளி குறைந்தது. மேலும், அமெரிக்காவில் உழைப்பு ஆற்றல் சந்தை தாழ்ந்த நிலையில் உள்ளது. தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை, இந்த எண்ணிக்கை உச்ச நிலையை எட்டியது.