உலகப் பார்வையில் சீனாவின் கடமை
2024-09-19 14:30:13

உலகின் முன்னேற்றப் போக்கிற்கேற்ப பாதுகாப்பு தொடர்பான கருப்பொருட்கள், அனைத்துத் தரப்புடன் நெருக்கமாகத் தொடர்புடையதாக மாறிவிட்டது. இத்தகைய சிக்கலான அறைகூவல்களைச் சமாளிக்க, சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இந்நிலையில் அண்மையில் 2024ஆம் ஆண்டின் உலகளவிலான பொதுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 122 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாறி வரும் உலகிற்கேற்ற ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி குறித்து இதில் கலந்துகொண்டோர் விவாதித்தனர். புதிய நிலைமைக்கேற்ற பின்னணியில், பொதுப் பாதுகாப்பு பற்றிய உலகப் பொதுச் சமூகத்தை உருவாக்குவதில் சீனாவின் கடமை மற்றும் பங்குகளையும் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.