பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பற்றி ஐ.நா பாதுகாப்பவையின் தீர்மானம்
2024-09-19 10:40:12

ஐ.நா பாதுகாப்பவை 18ஆம் நாள், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பிரச்சினைக்கான 10ஆவது அவசர கூட்டத்தை நடத்தியது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட உரிமை பிரதேசம் பற்றிய ஆலோசனை கருத்துகளுக்கான வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 திங்கள் காலத்திற்குள், பாலஸ்தீனத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும். இவ்வாக்கெடுப்பில் 124 ஆதரவு வாக்குகளும், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 எதிர்ப்பு வாக்குகளும் அளிக்கப்பட்டன. 43 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. சீனா ஆதரவாக வாக்களித்துள்ளது.

சர்வதேச நீதி மன்றம் ஜூலை திங்கள் 19ஆம் நாள் தொடர்புடைய ஆலோசனை கருத்துகளை வெளியிட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட உரிமை பிரதேசம் சட்டத்திற்குப் புறம்பானது. இஸ்ரேல் வெகுவிரைவில் வெளியேற வேண்டும். இப்பகுதியில் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.