© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் ஆகஸ்ட் மாதத்தில் சமூகத்தின் மின்சார பயன்பாட்டளவை 20ஆம் நாள் வெளியிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் முழு சமூகத்தின் மின்சார பயன்பாட்டு அளவு 96 ஆயிரத்து 490கோடி கிலோவாட் எட்டி, 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 8.9விழுக்காடு அதிகரித்தது.
அவற்றில் முதன்மைத் தொழிலின் மின்சாரப் பயன்பாட்டு அளவு 1490கோடி கிலோவாட் ஆகும். இது, கடந்த ஆண்டை விட, 4.6விழுக்காடு அதிகமாகும். இராண்டாம் நிலைத்தொழிலின் மின்சாரப் பயன்பாட்டு அளவு 56ஆயிரத்து 790கோடி கிலோவாட் ஆகும். இது, கடந்த ஆண்டை விட, 4.0விழுக்காடு அதிகமாகும். மூன்றாம் நிலைத்தொழிலின் மின்சாரப் பயன்பாட்டு அளவு 19ஆயிரத்து 30கோடி கிலோவாட் ஆகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 1.2விழுக்காடு அதிகமாகும்.
மேலும், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், சீனச் சமூகத்தின் மின்சாரப் பயன்பாட்டு அளவு மொத்தமாக 6 லட்சத்து 56ஆயிரத்து 190கோடி கிலோவாட்டாகும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 7.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.