மொத்தம் 1,963 திட்டங்களில் பங்கேற்கும் தனியார் மூலதனம்
2024-09-20 14:58:24

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் செப்டம்பர் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இதில், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து விரைவுபடுத்துவதற்கும், அரசு சாரா முதலீட்டின் உற்சாகத்தை அதிகரிப்பதற்கும் 2023ஆம் ஆண்டின் செப்டம்பரில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தனியார் மூலதனத்திற்கு திட்டங்களைப் பரிந்துரை செய்வதற்கான தேசியத் தளத்தை அமைத்துள்ளது. இந்தத் தளத்தின் மூலம் இவ்வாண்டின் ஆகஸ்ட் 31ஆம் நாள் வரை மொத்தமாக 1,963 திட்டங்களில் பங்கேற்கும் வகையில் தனியார் மூலதனங்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அடுத்து, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் நிலைமைகளைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் சென்று, தொழில் நிறுவனங்களின் முதலீட்டு விருப்பத்தை முழுமையாக மதிக்கும் அடிப்படையில், நேர்மை, திறந்த தன்மை மற்றும் நீதி ஆகிய கோப்பாட்டைப் பின்பற்றி, அணு மின்சாரம், இருப்புப்பாதை முதலிய முக்கிய திட்டங்களின் கட்டுமானத்தில் பங்கேற்கும் வகையில் மேலதிக தனியார் மூலதனத்தை ஈர்க்கும்.