2024 பெய்ஜிங் பண்பாட்டுக் கருத்தரங்கு தொடக்கம்
2024-09-20 09:55:19

2024ஆம் ஆண்டு பெய்ஜிங் பண்பாட்டுக் கருத்தரங்கு செப்டம்பர் 19ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலெய் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.

கடந்த ஆண்டில், இக்கருத்தரங்கிற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், சீன தேசத்தின் வெளிநாட்டுத் திறப்பு மற்றும் சகிப்புடன் கூடிய பண்பாட்டுத் தன்மை வெளிக்காட்டப்பட்டிருந்தது. பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, மனித குல பொது எதிர்கால சமூகத்தைச் சீனா பல்வேறு நாடுகளுடன் கையோடு கை கோர்த்து கட்டியமைக்கும் நேர்மையான விருப்பமும் அவ்வாழ்த்துச் செய்தியின் மூலம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஷிச்சின்பிங்கின்  பண்பாட்டுச் சிந்தனை, சீனப் பண்பாட்டுக் கட்டுமானத்திற்கு முக்கிய மைல்கல்லாக விளங்கி வருவதோடு, உலகப் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக முன்னேற்றத்தினை விரைவுபடுத்த சீனா விவேகத்தை வழங்கியுள்ளது என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.