© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
2023ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 24ஆம் நாள் ஜப்பான் அரசு ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து கதிரியக்க நீரைக் கடலில் தன்னிச்சையாக வெளியேற்றத் தொடங்கியது. நலன் தொடர்பான மிக முக்கியமான நாடுகளில் ஒன்றான சீனா ஜப்பானின் இந்த பொறுப்பற்ற செயலை உறுதியாக எதிர்த்து வருகின்றது. அதே வேளையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கவலைகளுக்கு ஜப்பான் உணர்வுபூர்வமாகப் பதிலளித்து, சீனா மாதிரிகளை எடுத்து அவற்றை சுயாதீனமாக கண்காணிக்க ஒப்புக் கொள்ள வேண்டுமென்றும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில், இரு நாடுகளின் தொடர்புடைய வாரியங்கள் இது குறித்து ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன. அதன்படி, சர்வதேசச் சட்டத்தின் கடமையை ஜப்பான் பயனுள்ள முறையில் பின்பற்றி, கடல் சூழல் மற்றும் கடல் உயிரினத்தாக்க மதிப்பீட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளும். சீனா உள்ளிட்ட தொடர்புடைய நாடுகளின் கவலைகளைக் கருத்தில் கொண்டு, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கட்டுக்கோப்புக்குள் கடலில் கதிரியக்க நீர் வெளியேற்றத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய நீண்டகால சர்வதேசக் கண்காணிப்பு அமைப்பொன்றை நிறுவுவதையும் ஜப்பான் வரவேற்கின்றது.