சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது
2024-09-21 18:30:42

சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழுவின் 5வது கூட்டம் செப்டம்பர் 19, 20 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் துணை நிதி அமைச்சர் லியோ மின், அமெரிக்க துணை நிதி அமைச்சர் ஜெய் ஷம்பாக் ஆகியோர் இக்கூட்டத்துக்குக் கூட்டாக தலைமை தாங்கினர். இரு நாட்டுப் பொருளாதாரத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர் என்று சீன நிதி அமைச்சகம் 20ஆம் நாள் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை மற்றும் கொள்கை, உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிப்பது, இரு தரப்புகளின் கவலைகள் முதலியவை குறித்து இரு தரப்பினரும் மனம் திறந்த மற்றும் எதார்த்தமான முறையில் தொடர்பு கொண்டனர். இரு தரப்பும் தொடர்பை நிலைநிறுத்தும் என்றும் ஒப்புக்கொண்டனர்.