சீனாவின் மீது பழி தூற்றுவது பற்றிய அமெரிக்காவின் நடவடிக்கை
2024-09-21 19:28:40

“சீனாவின் தீய பாதிப்பை”எதிர்க்கும் விதம் என்ற பெயரில், அமெரிக்கா 2023 முதல் 2027ஆம் நிதி ஆண்டு வரை மொத்தமாக 160 கோடி அமெரிக்க டாலர் பணத் தொகையை ஒதுக்கி வைக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை அண்மையில் சட்ட முன்மொழிவு ஒன்றை ஏற்றுக்கொண்டது. பணத்தைப் பயன்படுத்தி பொது கருத்துக்களைக் கட்டுப்படுத்தி, சீனாவின் மீது பழி தூற்றும் இந்த நடவடிக்கை, சர்வதேச உறவு மற்றும் சர்வதேசப் பொது கருத்துக்கள் நிலைமையைக் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்கா தான், போலியான தகவல்களைப் பரவல் செய்வதை இது நிரூபித்துள்ளது.

இந்தச் சட்ட முன்மொழிவின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணி, அமெரிக்கா பழி தூற்றுவதற்கான இலக்காகும். அமெரிக்க நிதியுதவி பெற்ற தனிநபர்களும், தொழில் நிறுவனங்களும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய எதிர்மறையான தகவல்களை உருவாக்க வேண்டும் என்று இந்தச் சட்ட முன்மொழிவு ஊக்கமளித்துள்ளது.

பணத்தைப் பயன்படுத்தி பொது கருத்துக்களைக் கட்டுப்படுத்துவது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை, பனிப் போர் காலத்தில் தொடங்கியது. வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களுக்குப் பணம் கொடுத்து, வதந்தி பரப்புதல், நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து, அவற்றின் மீது நிர்பந்தம் செய்தல், சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை, அமெரிக்காவின் வழக்கமான செயல்களாகும்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, பல சமூக ஊடகங்களில், அமெரிக்கா நூற்றுக்கணகான கணக்குகளை உருவாக்கி, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீது பழி தூற்றி வருகிறது.

அமெரிக்க அரசியல்வாதிகள், அரசியல் மூலதனத்தைப் பெறும் விதமாக, சீனாவின் மீதான அமெரிக்க மக்களின் பகைமையை வேண்டுமென்றே உருவாக்கி, சீன-அமெரிக்க பரஸ்பர ஒத்துழைப்புகளைச் சீர்குலைத்து வருகின்றனர். ஆனால், இது, அமெரிக்காவின் உள்நாட்டிலுள்ள பிரச்சினைகளை அடிப்படையில் தீர்க்க முடியாது. சீனாவின் வளர்ச்சியையும் தடுக்க முடியாது.