இலங்கையின் அரசுத் தலைவர் தேர்தல்
2024-09-21 17:20:43

இலங்கையின் அரசுத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் நாள் நடைபெற்றது. தற்போதைய அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர்.

நடப்புத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சத்துக்கும் மேலாகும். நாட்டளவில் 13 ஆயிரத்துக்கும் மேலான வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இலங்கையின் தேர்தல் சட்டத்தின்படி, 50 விழுக்காட்டுக்கும் மேலான வாக்குகளைப் பெறுபவர் நேரடியாக வெற்றி பெற்றவர் ஆவர்.

தற்போதைய அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேகின் பதவிக்காலம் நவம்பர் 17ஆம் நாள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.