காங்கோ குடியரசின் அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி
2024-09-22 16:29:11

செப்டம்பர் 6ஆம் நாள் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில், ஆப்பிரிக்காவின் 53 நாடுகளின் அரசுத் தலைவர்கள், ஆப்பிரிக்க ஒன்றிய கமிட்டியின் தலைவர், ஐ.நா தலைமைச் செயலாளர், சர்வதேச மற்றும் ஆப்பிரிக்க பிரதேச அமைப்புகளின் 30க்கும் மேலான பிரதிநிதிகள் முதலியோர் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில், “நவீனமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றி, சீன-ஆப்பிரிக்க பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது”என்ற தலைப்பில், சீன-ஆப்பிரிக்க பன்முக ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும் உறுதியான ஒத்தக் கருத்துக்களை எட்டியுள்ளன.

காங்கோ குடியரசின் அரசுத் தலைவர் டெனிஸ் சசோ-நுஸ்ஸோ சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த போது கூறுகையில், சீனா, ஆப்பிரிக்காவின் நிரந்தர நண்பராகும். சீனாவுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, ஆப்பிரிக்க நாடுகளின் பொது விருப்பமாகும். ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் உண்மையான சாதனைகளைப் பெற்றுள்ளன. திட்டப்பணிகள் முன்னேறி வருவதுடன், பரிமாற்றமும் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. தத்தமது நாட்டின் வளர்ச்சியில் இது ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என நம்புகின்றோம் என்றார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில், காங்கோ குடியரசுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பெரும் முன்னேற்றத்தைப் பெற்றது. ஒவ்வொரு ஒத்துழைப்புச் சாதனையும், பொது மக்களின் பாராட்டு மற்றும் வரவேற்பைப் பெற்றது. எதிர்காலத்தில், இரு நாட்டுறவின் வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.