“எதிர்கால எரியாற்றல்” எனும் நிகழ்வு நியூயார்க்கில் நடைபெற்றது
2024-09-22 17:24:30

ஐ.நாவின் எதிர்கால உச்சி மாநாடு துவங்குவதை முன்னிட்டு, “எதிர்கால எரியாற்றல்” எனும் தலைப்பிலான நிகழ்வு செப்டம்பர் 21ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. எதிர்கால எரியாற்றல் அறிக்கை இதில் வெளியிடப்பட்டது. உலக எரியாற்றல் துறையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதும், உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதும் இந்நிகழ்வின் நோக்கமாகும். 30க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபு சுங் இதில் உரை நிகழ்த்திய போது கூறுகையில், சர்வதேச சமூகம் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, காலநிலை மாற்றம் தீவிரமாகுதல், இயற்கை சீற்றம் அடிக்கடி ஏற்படுவது முதலிய அறைகூவல்களை சரியாக கையாண்டு, எரியாற்றல் வளர்ச்சி முறையின் நியாயமான மற்றும் ஒழுங்கான மாற்றத்தை முன்னேற்றி, தொடரவல்ல வளர்ச்சி இலக்கைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

உலகளாவிய பசுமை வளர்ச்சிக்கு சீனா முக்கிய பங்காற்றி வருவதை காலநிலை செயலுக்கான ஐ.நா தலைமைச் செயலாளரின் சிறப்பு தூதர் செல்வின் ஹார்ட் உரை நிகழ்த்திய போது பாராட்டினார்.