முதல் 8 மாதங்களில் சீனாவில் உபகரணங்களின் கொள்முதல் முதலீடு 16.8விழுக்காடு அதிகரிப்பு
2024-09-23 15:41:14

 

உபகரணங்களின் பெருமளவிலான புதுப்பித்தல் மற்றும் பழைய நுகர்வுப் பொருட்களுக்குப் பதிலாகப் புதியதை மாற்றுவதென்ற கொள்கையின் நடைமுறையாக்க நிலைமை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களின் புதுப்பித்தல் கொள்கையால், தொழில்நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் செயல்திறனுக்கான வசதிகள், மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களைப் புதுப்பிக்கும் ஆக்கத்தைப் பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், உபகரணங்களின் கொள்முதல் முதலீட்டுத் தொகை 16.8விழுக்காடு அதிகரித்தது. அதன் அதிகரிப்பு வேகம் அனைத்து நிலையான இருப்பு முதலீட்டுத் தொகையை விட, 13.4விழுக்காடு புள்ளிகள் அதிகம். அனைத்து முதலீட்டு அதிகரிப்புக்கான அதன் பங்களிப்பு விகிதம் 64.2விழுக்காட்டை எட்டியது. மேலும், முதல் 7 மாதங்களில் இருந்ததை விட, அது 3.5விழுக்காடு புள்ளிகள் அதிகரித்தது.