ஐ.நாவின் எதிர்கால உச்சிமாநாடு தொடக்கம்
2024-09-23 09:34:25

இரு நாட்கள் நீடித்த ஐ.நாவின் எதிர்கால உச்சிமாநாடு செப்டம்பர் 22ஆம் நாள், நியூயார்க் மாநகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் தொடங்கியது. பல தரப்புவாதக் கட்டுக்கோப்பை மேலும் விரிவாக்கி, எதிர்காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்கும் வகையில், எதிர்கால உடன்படிக்கை எனும் சாதனை ஆவணம் ஒன்று இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொந்தளிப்பான, மாற்றங்கள் ஏற்பட்டுள்ள காலக்கட்டத்தில் உலகம் உள்ளது. தீர்மானிக்கும் ஆற்றலுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச ஒத்துழைப்புகளைப் புதுப்பித்து சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் இந்த உச்சிமாநாட்டின் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார். ஆழமான முறையில் சீர்திருத்தம் செய்து, ஐநா சாசனத்தின் மதிப்பு என்ற அடிப்படையில், உலகின் நிறுவனங்கள் மேலும் சட்டப்பூர்வமாக, நியாயமாக மற்றும் பயனுள்ளதாக மாற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.