ஆப்கானிஸ்தானின் இன்னல் குறித்து சீனா கருத்து
2024-09-23 19:34:48

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 57வது கூட்டத்தொடரில் ஆப்கான் மனித உரிமை நிலைமை தொடர்பான பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தப்பட்டது. ஆப்கான் மகளிரின் உரிமை மற்றும் நலன் பற்றி பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த பிரதிநிதிகள் சிலர் கவலை தெரிவித்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் செப்டம்பர் 23ஆம் நாள் கூறுகையில், மகளிரின் உரிமை மற்றும் நலனைப் பாதுகாப்பதில் சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது. மகளிரின் உரிமை மற்றும் நலனை மதித்து பாதுகாக்க வேண்டும் என ஆப்கான் அதிகார வட்டாரம் பலமுறை வலியுறுத்துவதோடு, தொடர்புடைய கொள்கையை ஆப்கான் தரப்பு செயல்படுத்த வேண்டும் என்று சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது 2 கோடியே 37 லட்சம் ஆப்கான் மக்களுக்கு அவசர மனித நேய உதவி தேவைப்படுகிறது. ஒரு கோடியே 24 லட்சம் மக்களுக்கு கடும் பட்டினி ஏற்பட்டுள்ளது என ஐ.நா தலைமைச் செயலாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆப்கானிஸ்தான் எதிர்நோக்கும் மிக அவசரமான இன்னலில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி, ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றி, ஆப்கான் மக்களின் நலனை அதிகரித்து, ஆப்கான் மக்களின் உரிமையை உண்மையாக பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.