சீன மத்திய வங்கி:0.5 விழுக்காடு புள்ளிகள் குறைவு
2024-09-24 14:29:07

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் 24ஆம் நாள் காலையில் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. சீன மத்திய வங்கி, நாணயக் கண்காணிப்பு தலைமை பணியகம், சீனப் பங்குப் பத்திர ஒழுங்குமுறைப் பணியகம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் இதில் பங்கெடுத்தனர். பொருளாதாரத்தின் உயர் தரமுள்ள வளர்ச்சி நிலைமை குறித்து அவர்கள் எடுத்துக்கூறினார்.

சமீபத்தில், வங்கிகளின் கையிருப்புத் தொகை விகிதம் 0.5 விழுக்காடு புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் இது நாணயச் சந்தைக்கு நீண்டகாலமான, புழக்கம் தன்மை வாய்ந்த ஒரு இலட்சம் கோடி யுவான் வினியோகிக்கப்படும் என்றும் சீன மத்திய வங்கி அறிவித்துள்ளது.