சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்து பற்றி பற்றி சீனா கருத்து
2024-09-24 10:40:30

ஐரோப்பிய ஒன்றியத்தின் பால் பொருட்கள் மீதான சீனாவின் சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வை ஐரோப்பிய ஒன்றியம் உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக விதி மீறல் தீர்ப்பதற்கான அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து, சீன வணிகத் துறை அமைச்சகத்தின் சட்ட பிரிவுப் பொறுப்பாளர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலந்தாய்வுக் கோரிக்கையை சீனா பெற்றுள்ளது. இப்புலனாய்வை உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக விதி மீறல் தீர்ப்பதற்கான அமைப்பிடம் ஒப்படைத்தது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய விதிகளின்படி சீனா இதைச் சமாளிக்கும் என்றும் கூறினார்.

உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடான சீனா எப்போதும் வர்த்தக நிவாரண நடவடிக்கையை விழிப்புணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும் மேற்கொண்டு வருகிறது. சீனாவின் சட்டத்தின்படி, உள்நாட்டு தொழிலின் விண்ணப்பத்திற்கிணங்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் பால் பொருட்கள் மீது சலுகைக்கு எதிரான வரி வசூலிப்புப் புலனாய்வைச் சீனா இம்முறை மேற்கொண்டது. நாட்டின் தொழிலின் நியாயமான கோரிக்கை மற்றும் சட்டப்பூர்வமான உரிமையைப் பேணிக்காப்பதற்குச் சீனா பொறுப்பேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.