© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

உயர்தர வளர்ச்சி பற்றிய செய்தியாளர் கூட்டத்தை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் 24ஆம் நாள் நடத்தியது. சட்டம் வழங்கும் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது பற்றிய சீர்திருத்தக் கொள்கை குறித்து, சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி துணை அமைச்சர் லீ ட்சொங் கூறுகையில், தற்போது முதல் அடுத்த ஆண்டின் ஜனவரி திங்கள் வரை, சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம், பல்வேறு தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து, கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் அரசவையின் கொள்கைகளை உணர்வுப்பூர்வமாக செயல்படுத்தி, சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களைக் கடைப்படித்து, இச்சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளும் என்றார்.
முதலாவதாக, இச்சீர்திருத்தத்துடன் தொடர்புடைய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை வெகுவிரைவில் வகுத்து மேம்படுத்த வேண்டும். இரண்டாவதாக, சீர்திருத்தக் கொள்கைக்கான பரப்புரை மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, இச்சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கான சேவைகளின் பல்வேறு ஆயத்தப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.