இலங்கையின் புதிய தலைமையமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரிணி
2024-09-24 19:42:48

ஹரிணி அம்மையாரை இலங்கையின் புதிய தலைமையமைச்சராக அந்நாட்டின் அரசுத் தலைவர் திசநாயக்க செப்டம்பர் 24ஆம் நாள் நியமித்தார்.

இலங்கை தலைமையமைச்சர் தினேஷ் குணவர்தன 23ஆம் நாள் முற்பகல் பதவியிலிருந்து விலகினார். இலங்கை தேர்தல் ஆணையம் 22ஆம் நாள் வெளியிட்ட வாக்கு பதிவு முடிவின்படி, தேர்தலில் வெற்றி பெற்ற திசநாயக்க புதிய அரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, தலைமையமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவரால் நியமிக்கப்பட உள்ளனர்.

சீன-இலங்கை நட்பார்ந்த ஒத்துழைப்புகளை இலங்கையின் புதிய அரசு தொடர்ந்து முன்னேற்றும் என்று ஹரிணி 22ஆம் நாளிரவு தெரிவித்தார்.