பொருளாதார மீட்சிக்கான பணியில் இலங்கையின் புதிய அரசுத் தலைவருடன் இணைந்து செயல்பட சர்வதேச நாணய நிதியம் விருப்பம்
2024-09-24 18:34:13

இலங்கையின் புதிய அரசுத் தலைவரான அனுர குமார திச நாயக்கவுடன் இணைந்து செயல்பட சர்வதேச நாணய நிதியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

"2022 ஆம் ஆண்டில் மிக மோசமான நிதி நெருக்கடிகளில் இருந்து இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கையை முன்னேற்றும் வகையில் அரசுத் தலைவர் திச நாயக்க மற்றும் அவரது நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்ப்புடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச கடன் வழங்குனர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொள்கையளவில் ஒரு உடன்படிக்கை ஏற்ப்பட்டிருப்பதை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.

2023 ஆம் ஆண்டின் மார்ச் மாதம், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 48 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.