மாலத்தீவு அரசுத் தலைவர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சரின் சந்திப்பு
2024-09-24 10:34:43

மாலத்தீவு அரசுத் தலைவர் முகமது முய்சு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகியோர் செப்டம்பர் 23ஆம் நாள் நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர்.

வாங் யீ கூறுகையில், சீன-மாலத்தீவு உறவு பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்கிடையிலான சமமான பழகுதல், ஒன்றுக்கு ஒன்று உதவி,  நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது ஆகியவற்றின் மாதிரியாக திகழ்கின்றது. மாலத்தீவுடன் கையோடு கை கோர்த்து பாரம்பரிய நட்பை வெளிக்கொணர்ந்து, மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதை முன்னேற்றச் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

முய்சு கூறுகையில், ஒரே சீனா என்ற கொள்கையை மாலத்தீவு உறுதியாகப் பின்பற்றி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கிய சர்வதேச ஒத்துழைப்பு முன்மொழிவுகளை ஆதரிக்கின்றது. மாலத்தீவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குச் சீனா வழங்கிய தன்னலமற்ற உதவிகளுக்கு மாலத்தீவு அரசு மற்றும் மக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். இரு நாட்டு உறவு மாபெரும் வளர்ச்சியைப் பெற எதிர்பார்க்கின்றேன் என்றார்.