ஐ.நா.வின் எதிர்கால உச்சிமாநாட்டில் வாங் யீ பங்கெடுப்பு
2024-09-24 14:10:29

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நியூயோக்கில் ஐ.நா.வின் எதிர்கால உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பொது விதியை உறுதியாகப் பிடித்து, அருமையான எதிர்காலத்தை உருவாக்குவது என்ற தலைப்பிலான உரை நிகழ்ந்தினார்.

வாங் யீ கூறுகையில், நூறு ஆண்டுகளில் உலகில் காணப்படாத பெரிய மாற்றங்களை எதிர்கொண்ட நிலையில், எதிர்கால உச்சிமாநாட்டை நடத்துவது, எதிர்கால ஒப்பந்தங்களை வெளியிடுவது, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சக்தி ஒன்றிணைத்தல் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான வரைபடத்தை வரைவது முதலியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும் முக்கிய கருத்துக்கள், உயர் தரத்துடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம், உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவை, மனிதக்குலத்தின் கூட்டு அறைகூவல்களைச் சமாளிக்கும் புதிய தீர்வுத் திட்டத்தை வழங்கி, அருமையான உலகத்தை உருவாக்குவதற்கான புதிய தீர்மானத்தை உருவாக்கும் என்றார்.