சீன-ஆசியான் பொருட்காட்சி துவக்கம்
2024-09-24 19:15:40

21வது சீன-ஆசியான் பொருட்காட்சியும் சீன-ஆசியான் வணிகம் மற்றும் முதலீட்டு உச்சி மாநாடும் செப்டம்பர் 24ஆம் நாள் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நன் நிங் நகரில் துவங்கியது. சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புகளின் புதிய சாதனைகள் இப்பொருட்காட்சி மற்றும் உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்படும்.

சீனா மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசு அலுவலர்கள், சீனாவுக்கான ஆசியான் நாடுகளின் தூதர்கள் ஆகிய சுமார் 1100 பேர் இப்பொருட்காட்சி மற்றும் உச்சி மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.

சீன-ஆசியான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை ஆழமாக்குவது, சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர கட்டுமானத்தை முன்னேற்றுவது ஆகியவை குறித்து சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் தலைவர்கள் மேலும் பரந்துபட்ட ஒத்த கருத்துக்களை எட்டி, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, மேலும் நெருங்கிய சீன-ஆசியான் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவர்.