சீனாவில் உருவாக்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள்களைக் கொண்ட தானியங்கி வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடை:அமெரிக்கா
2024-09-25 11:27:42

அமெரிக்கச் சாலைகளில் சீனாவில் உருவாக்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள்களுடன் இயங்கும் இணையத்துடன் கூடிய வாகனங்களிலும் தானியங்கி வாகனங்களிலும் பயன்படுத்த தடை விதிக்க அமெரிக்க வணிக அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதற்கு சர்வதேசச் சமூகத்தில் சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

உலகெங்கிலும், அறிவார்ந்த மற்றும் இணையதள வசதியுடன் கூடிய வாகனங்கள் துறையில் சர்வதேச தரத்திற்குப் பொருந்தியசீனாவின் வன்பொருள் மற்றும் மென்பொருள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. சீனாவின் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி மிகவும் பாதுகாப்பானது மற்றும் மிகவும் பயனுள்ளதாகும். அமெரிக்காவின் புதிய தடை பெரும் தவறாகும். உண்மையில், சீனாவிலிருந்து விலகிச் செல்வது, உலகளாவிய வாகனத் தொழிலுக்கு அதிக நிச்சயமற்ற தன்மையைக் கொண்டு வரும்.

நிர்வாக உத்தரவுகளால் தொழில்துறை சங்கிலியைத் துண்டிக்கும் இச்செயல் மேற்கொள்ளக் கூடாது. மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் சிக்கலான தொழிலாக, வாகனத்தின் வன்பொருள் மற்றும் மென்பொருளை மாற்றுவது சிக்கலான சோதனை, சான்றிதழ் செயல்முறை மற்றும் செலவுக் கருத்தாய்வுகளை உள்ளடக்கியது. இது குறுகிய நேரத்தில் நிறைவேற்றப்படுவது மிகவும் கடினம்.