இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தும், புதிய நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் உத்தரவு
2024-09-25 17:25:31

இலங்கையின் அரசுத் தலைவரான அனுர குமார திஸ நாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட சிறப்பு அரசானை மூலம் நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார்.

மேலும் அவர் வெளியிட்ட அரசானையில் புதிய நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14 ஆம் நாள் நடைபெறும் என்றும், முதல் கூட்டம் 21 ஆம் நாள் கூட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 ஆம் நாள் தொடங்கி 11 ஆம் நாள் நண்பகலுடன் முடிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற அரசுத் தலைவர்  தேர்தலில் திஸ நாயக்க சுமார் 5.7 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.