உலகப் பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிப்பீடு
2024-09-25 19:46:33

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு செப்டம்பர் 25ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், 2024, 2025 ஆகிய ஆண்டுகளில், உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 3.2 விழுக்காடாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, உலகத்தில் பண வீக்க நிலை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. ஜி20 நாடுகளில், பல நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு பெரும் முன்னேற்றத்தைப் பெற்று வருகின்றது. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டு, அமெரிக்கப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 2.6 மற்றும் 1.6 விழுக்காடாக இருக்கக்கூடும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக வர்த்தக மீட்சி அளவு, மதிப்பீட்டில் இருந்ததை விட அதிகம். ஆனால் விமானப் போக்குவரத்து செலவு உயர் நிலையில் உள்ளது. ஏற்றுமதி தொகை தாழ்ந்த நிலையில் உள்ளது. புவியமைவு அரசியல் நிலைமை மற்றும் மோசமாகி வருகின்ற வர்த்தக உறவு, முதலீட்டை மென்மேலும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்றும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.