உக்ரைன் பிரச்சினைக்கான பாதுகாப்பவையின் கூட்டத்தில் 3 கருத்துக்களை முன்வைத்த வாங்யீ
2024-09-25 15:40:46

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் 24ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் உக்ரைன் பிரச்சினைக்கான பாதுகாப்பவையின் உயர்நிலை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் வாங்யீ 3 முக்கிய கருத்துகளை முன்வைத்தார். முதலாவது, நெருக்கடி நிலைமையைத் தணிவுபடுத்துவதற்கான உணர்வை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னேற்றுவதற்கான பொறுப்புணர்வை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவது, இந்நிலைமை தீவிரமாக்கும் வாய்ப்பைக் கட்டுப்படுத்துவது பற்றிய அவசிய உணர்வை வலுப்படுத்த வேண்டும்.

பன்னாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். ஐ.நா சாசனத்தின் கோட்பாடு மற்றும் கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும். பன்னாடுகளின் நியாயமான கவனம் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நெருக்கடியை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு உதவியளிக்கும் அனைத்து முயற்சிகளும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். உக்ரைன் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு மற்றும் அடிப்படை வழிக்காட்டல் இதுவாகும் என்று வாங்யீ கூறினார்.