சீன-அமெரிக்க இளைஞர்களின் பண்பாட்டு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியில் பொங்லியுவான் பங்கேற்பு
2024-09-25 09:25:56

 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங்லியுவான் அம்மையார் செப்டம்பர் 24ஆம் நாள் மாலை பெய்ஜிங் 8ஆவது நடுநிலை பள்ளியில் சீன-அமெரிக்க நட்பு, இளைஞர்கள் கூட்டு பயணம் என்ற இரு நாட்டு இளைஞர்களின் பண்பாட்டு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிக் குழுவுடன் அவர் நட்புடன் உரையாடினார். அமெரிக்க ஆசிரியர்களும் மாணவர்களும் சீனாவில் பயணம் மேற்கொண்டு சீனா பற்றி நேரில் அறிந்து கொள்வதற்கு பொங்லியுவான் அம்மையார் வரவேற்பு தெரிவித்தார். சீன-அமெரிக்க இளைஞர்களின் புரிந்துணர்வு மற்றும் தொடர்பு மூலம், இரு நாட்டுறவுக்கு ஆக்கப்பூர்வமான ஆற்றலைக் கொண்டு வரும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.