© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
செப்டம்பர் 24ஆம் நாள் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 57வது கூட்டத்தில், சின்ஜியாங், ஹாங்காங், ஷிட்சாங் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டுக்கு, நூற்றுக்கணக்கான நாடுகள் ஆதரவளித்து, மனித உரிமை விவகாரத்தை அரசியல் மயமாக்குவதை எதிர்த்துள்ளன.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 25ஆம் நாள் கூறுகையில், கியூபாவின் பிரதிநிதி, 80 நாடுகளின் சார்பில் உரை நிகழ்த்தினார். சின்ஜியாங், ஹாங்காங் மற்றும் ஷிட்சாங் விவகாரங்கள், சீனாவின் உள் விவகாரங்களாகும். மனித உரிமையைச் சாக்குப்போக்கில் பிற நாடுகளின் உள் விவகாரத்தில் தலையிடுவதை எதிர்ப்பதாக கூறினார். பல்வேறு தரப்புகள், ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டைப் பின்பற்றி, பல்வேறு நாடுகளின் மக்கள், தத்தமது நாட்டின் நிலைமைக்கிணங்க சொந்த வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், உகாண்டா, வெனிசூலா, காம்பியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உரை நிகழ்த்தி, சீனாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்துள்ளன என்று தெரிவித்தார்.
இனவெறி, துப்பாக்கி வன்முறை, சமூகத்தில் நியாயமற்ற நிலைமை, அகதி மற்றும் குடியேறுவோரின் உரிமையை ஊறுபடுத்துதல் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை பிரச்சினைகளை, அமெரிக்கா ஆழ்ந்த முறையில் சுய மதிப்பீடு செய்து, சொந்த நாட்டு மக்களின் உரிமையை உத்தரவாதம் செய்து, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தி, மனித உரிமைக்கான சர்வதேச ஒத்துழைப்புகளில் பயன்தரும் முறையில் கலந்து கொள்ள வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.