ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வாங் யி
2024-09-26 16:27:07

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, செப்டம்பர் 25ஆம் நாளன்று ஐ.நா. பொது பேரவையின் கூட்டதொடர் காலத்தில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அப்போது வாங் யீ கூறுகையில், ஜி-20 உறுப்பு நாடுகள் தங்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும். கூட்டாண்மை உறவுடன் உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், ஜி-20 ஐ.நாவின் சீர்திருத்தத்தை ஆதரித்து, உலகப் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தின் சீர்திருத்தத்தை ஊக்குவித்து, உலக வர்த்தக மற்றும் வளர்ச்சி சார்ந்த சீர்திருத்தங்களை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

அமைதியும் பாதுகாப்பும் அனைத்து நாட்டு மக்களின் பொதுவான விருப்பமாகும். வளர்ச்சியின் சாதனைகளை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் ஜி20 உடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதாகவும் வாங் யீ தெரிவித்தார்.