ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 7 விழுக்காடாக மதிப்பிட்டுள்ளது
2024-09-26 18:42:34

ஆசிய வளர்ச்சி வங்கி,நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 7 விழுக்காடாக மதிப்பிட்டுள்ளது.மேலும்,மேம்படுத்தப்பட்ட விவசாய உற்பத்தியில் வரும் காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

2025 மார்ச் 31 ஆம் நாளுடன் முடிவடையும் நிதியாண்டில்,இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 7 விழுக்காடாகவும், 2025 நிதியாண்டில் 7.2 விழுக்காடாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது.

2024 நிதியாண்டில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான பருவமழை வலுவான விவசாய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 4.6 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் 4.7 விழுக்காடாக வேகமாக வளரும் என்று கணித்துள்ளது.