மனிதகுலத்தின் கூட்டு எதிர்காலத்தை உருவாக்கும் முறைமை
2024-09-26 09:37:10

உலகின் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அமைதி, மதிப்பு, செழுமையுடன் கூடிய எதிர்காலம் பிடிக்கும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் அண்மையில் ஐ.நாவின் எதிர்கால உச்சிமாநாட்டில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதற்கு மாறாக உலகின் பதற்றம் தொடர்ந்து தீவிரமாகிய நிலைமையில் மனிதகுலம் முன்பு கண்டிராத இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வுச்சி மாநாடு எதிர்காலத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்கால உச்சிமாநாட்டின் முதல் நாளில், பல்வேறு தரப்புகள் கலந்தாய்வு மூலம் எதிர்கால ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் தொடரவல்ல வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பு, அறிவியல்  தொழில்நுட்ப புத்தாக்கம், இளமை மற்றும் எதிர்கால தலைமுறை, உலக மேலாண்மை ஆகிய 5 முக்கிய கருப்பொருட்கள் அடங்கியுள்ளன. உலகின் எதிர்கால சமூகத்தின் வளர்ச்சிக்கான மைல் கல்லாக இவ்வாவணம் திகழும் என்று பல்வேறு தரப்புகளும் கருத்து தெரிவித்துள்ளன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இவ்வுச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில்,  ஐ.நா மையமாகிய சர்வதேச அமைப்பு முறையை பல்வேறு தரப்புகள் பேணிக்காக்க வேண்டும். வளரும் நாடுகளின் நியாயமான உரிமைகளையும் பேணிக்காக்க வேண்டும். மேலும், அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை வாய்ந்த பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினால், அவரின் கருத்துக்குப் பல்வேறு தரப்புகளும் ஆதரவு தெரிவித்தனர்.