© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நியூயார்க்கில் ஐ.நா. பேரவை கூட்டத்தொடர் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி ஜோசப் போரெல் ஃபோண்டெல்ஸைச் சந்தித்துப்பேசினார்.
இச்சந்திப்பின் போது வாங் யீ கூறுகையில், உயர் நிலை பிரதிநிதியாக பொறுப்பு ஏற்கும் போது, நீங்கள் சீனாவுடனான உறவை ஆக்கப்பூர்வமாக வளர்த்துக் கொண்டீர்கள். சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாளிகளாகும். எதிரிகள் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தினீர்கள். உங்களின் இக்கருத்துக்குச் சீனா பாராட்டு தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். மேலும், சீனாவும் ஐரோப்பாவும் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், சர்வதேச மற்றும் பிராந்திய நிலைமையை நிதானப்படுத்துவதற்கும் மனித வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும் பங்காற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
போரெல் கூறுகையில், சீனா வலிமையான நாடாகும். தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலகிற்குச் சீனா தேவை. ஐரோப்பா சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார்.