டிஜிட்டல் வர்த்தகத் தொகையில் உலகின் முதல் மூன்று இடங்களில் சீனா
2024-09-26 15:10:27

டிஜிட்டல் வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழு, சர்வதேச வர்த்தக மையம் ஆகியவை கூட்டாக இயற்றிய 3ஆவது உலக டிஜிட்டல் வர்த்தகக் கண்காட்சியின் முதன்மை அறிக்கையான 2024ஆம் ஆண்டு உலக டிஜிட்டல் வர்த்தக வளர்ச்சி அறிக்கை செப்டம்பர் 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதில், 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலக டிஜிட்டல் வர்த்தகத் தொகை, 6 இலட்சத்து 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரிலிருந்து 7 இலட்சத்து 13 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.8 விழுக்காட்டு அதிகமாக உள்ளது. உலகின் முதல் பத்து பொருளாதார நாடுகளின் கண்ணோட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகியவை டிஜிட்டல் வர்த்தகத் தொகையில் உலகளவில் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.