உலகப் புத்தாக்க குறியீட்டுத் தரவரிசையில் சீனா 11வது இடம்
2024-09-26 17:40:32

2024ஆம் ஆண்டு உலகப் புத்தாக்க குறியீட்டு அறிக்கையை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு செப்டம்பர் 26ஆம் நாள் வெளியிட்டது. 130 நாடுகள் அடங்கிய தரவரிசையில், சீனா முன்னேற்றம் அடைந்து 11வது இடத்தில் உள்ளது. முதல் 30 நாடுகளில் இடைநிலை வருமானம் பெறுகின்ற ஒரே ஒரு நாடாக சீனா திகழ்கிறது.

ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பெற்றன. கடந்த 10 ஆண்டுகளில் சீனா, துருக்கி, இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் புத்தாக்க ஆற்றல் மிக உயர்வேக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.