அமெரிக்காவின் பல்வேறு துறையினருடன் வாங்யீ சந்திப்பு
2024-09-26 19:38:15

அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய கமிட்டி, அமெரிக்க-சீன வர்த்தகத்துக்கான தேசிய கமிட்டி, அமெரிக்க வணிகச் சங்கம், ஆஸ்பென் நிறுவனம், ஆசிய சமூகம், வெளியுறவுக் கமிட்டி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, செப்டம்பர் 25ஆம் நாள் உரையாடினார்.

வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு, சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 45ஆவது ஆண்டு நிறைவாகும். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சீன-அமெரிக்க உறவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஒன்றுக்கொன்று மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பின் மூலம் கூட்டு வெற்றி ஆகிய 3 கோட்பாடுகளை அவர் முன்வைத்தார். அமெரிக்கா மற்றும் உலகத்தைப் பொறுத்தவரை, சீனாவின் வளர்ச்சி, வாய்ப்பாக உள்ளது. அறைக்கூவலாக அமையாது என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

உலகத்தின் இரு பெரிய நாடுகளான சீனாவும் அமெரிக்காவும், இரு நாட்டுறவின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்கும் அதேவேளையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து, தற்போதைய உலகளாவிய அறைக்கூவல்களைச் சரியாக கையாள வேண்டும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.