ரஷிய வெளியுறவு அமைச்சருடன் வாங் யீ சந்திப்பு
2024-09-26 16:19:41

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 25ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவை கூட்டத்தின் போது, ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய்  லாவ்ரோவைச் சந்தித்தார்.

இவ்வாண்டில் மட்டும், ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இருமுறை சந்திப்பு நடத்தியுள்ளார். இது இரு தரப்புறவுக்கு முக்கிய உத்திநோக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது என்று வாங் யீ தெரிவித்தார். இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டதற்கான அசல் நோக்கத்தை சீனா எப்போதும் நிலைநிறுத்தி, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக்கான அர்த்தத்தை தொடர்ந்து செழுமைப்படுத்தி ரஷியாவுடன் கூட்டாக முயற்சி செய்து, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைத் தேடும் என்றும் கூறினார். 

லாவ்ரோவ் கூறுகையில், ரஷிய-சீன பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு இரு நாட்டு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச நிலைமையை நிலைப்படுத்துவதற்கான முக்கிய பகுதியாகவும் மாறியுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளின் தூதாண்மை உறவை நிறுவிய 75ஆம் ஆண்டு நிறைவை சீனாவுடன் கூட்டாக கோலாகலமாகக் கொண்டாடவும், உயர்மட்டப் பறிமாற்றங்களை நன்கு ஏற்பாடு செய்யவும், இரு நாட்டுறவை மேலதிக வளர்ச்சியை நோக்கி முன்னேற்றவும் ரஷியா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.