© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு செப்டம்பர் 26ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலைமை விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, அடுத்த கட்டத்தில் பொருளாதாரப் பணிக்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.
இவ்வாண்டு முதல், ஷிச்சின்பிங்கின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, ஒட்டுமொத்த சரிப்படுத்தல் ஆற்றலை வலுப்படுத்தி, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பை முக்கியமாக ஆழமாக்கி, உள்நாட்டுத் தேவையை விரிவாக்கி, பொருளாதார அமைப்புமுறையை மேம்படுத்தி வருகிறது. இதனால் பொருளாதார நிலைமை பொதுவாக நிதானமாக இயங்கி வருகிறது. புதிய உயர் தர உற்பத்தி ஆற்றல் சீராக முன்னேறி வருகிறது. சமூகத்தின் பொது நிலைமை நிதானமாக வளர்ந்து வருவதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்து, பட்டதாரிகள், விவசாய தொழிலாளர்கள், வறுமையிலிருந்து விடுவித்த மக்கள், வேலை இல்லாத குடும்பங்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அளித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு குறைந்த வருமானமுடையவர்களுக்கான உதவிப் பணியை வலுப்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.