உலக வளர்ச்சி முன்னெடுப்பின் ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விருப்பம்: வாங்யீ
2024-09-27 10:08:45

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் 25ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் தென் உலகிற்கு ஆதரவு அளிக்கும் உலக வளர்ச்சி முன்மொழிவும் சீனா நடவடிக்கையும் என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் உரைநிகழ்த்திய போது வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியில், உலக வளர்ச்சி முன்மொழிவு, சீனாவின் கருத்திலிருந்து சர்வதேச பொது கருத்தாகவும் ஒத்துழைப்பு கண்ணோட்டத்திலிருந்து கூட்டு நடவடிக்கையாகவும் மாறியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு சீனத் திட்டத்தையும் சீன ஆற்றலையும் இந்த முன்மொழிவு கொண்டு வந்துள்ளது. சீனா பல்வேறு தரப்புகளுடன் இணைந்து உலக வளர்ச்சி முன்மொழிவு குறித்து ஒத்துழைப்புகளை ஆழமாக்கி 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தி நவீனமயமாக்கலின் நலன்களை ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொருவருக்கும் அளிக்க விரும்புவதாகவும் வாங்யீ தெரிவித்தார்.